SRI LANKA
Local language summary page

SRI LANKA
සිංහල / தமிழ்

දේශගුණයට අනුවර්තනය වීම සඳහා නිර්මිත පරිසරය (Built Environment) පිළිබඳ ඉගෙනුම.

BEACON ව්‍යාපෘතිය (දේශගුණයට අනුවර්තනය වීම සඳහා නිර්මිත පරිසරය ඉගෙනුම) යනු යුරෝපා සංගමයේ Erasmus+ වැඩසටහන මඟින් සම-අරමුදල් සපයන සහයෝගිතා පර්යේෂණ ව්‍යාපෘතියකි. තෙවසරක් පුරා පැවතෙන  මෙම පර්යේෂණ වැඩසටහන මඟින් වෙරළබඩ කලාපවල දේශගුණික විපර්යාසයන්ට මුහුණ දීමට, නිර්මිත පරිසරය පිළිබඳ අන්තර් විෂයයීය හා නව්‍ය පර්යේෂණ පදනම් කරගත් ඉගෙනුමක් සංවර්ධනය කිරීම අරමුණු කර ඇත. දේපල, යටිතල පහසුකම්, වෙරළබඩ කර්මාන්ත, වෙරළබඩ හා සමුද්‍ර පරිසර පද්ධතිවලට සෘජු තර්ජන ඇති කළ හැකි හේතුවෙන් ද පවත්නා නිර්මිත පරිසරය ජලයෙන් යට කිරීමේ ඇති හැකියාව නිසාවෙන් දේශගුණික විපර්යාසයන්ගේ බලපෑම අවදානම් සහගත වෙරළබඩ ඉදි කළ පරිසරයට විනාශකාරී විය හැකි ය. තව ද වෙරළබඩ තීරයන් අසල ඉහළ ජනගහනයකින් යුත් නාගරික මධ්‍යස්ථාන පැවැත්මෙන් මෙම අවදානම වර්ධනය වේ. මේ හේතුවෙන් වෙරළබඩ නිර්මිත පරිසරයන් තුළ ප්‍රත්‍යක්ෂ දේශගුණික අනුවර්තන පියවර වර්ධනය කිරීමේ දැඩි අවශ්‍යතාවක් පවතී. නමුත් සමස්තයක් ලෙස නිර්මිත පරිසරය තුළ මෙන් ම ඉදිකිරීම් හා දේපළ කර්මාන්ත තුළ, දේශගුණික විපර්යාසයන්ට එලදායී ලෙස ප්‍රතිචාර දැක්වීම  සහ අනුවර්තනය වීම සම්බන්ධයෙන් සැලකිය යුතු දැනුම පරතරයක් ඇත. මෙය විසදීමේ දී දේශගුණික විපර්යාස අනුවර්තන ක්‍රියාවලියේ ප්‍රධාන භූමිකාවන් ගනු ලබන නිර්මිත පරිසරය වෘත්තිකයන්ගේ දැනුම හා කුසලතා ඉහළ නැංවීම අත්‍යවශ්‍ය වේ. මේ හේතුවෙන්, වෙරළබඩ කලාපවල දේශගුණික විපර්යාසයන්ට මුහුණ දීමට , නිර්මිත පරිසරය පිළිබඳ අන්තර් විෂයයීය හා නව්‍යමය පර්යේෂණ පදනම් කරගත් ඉගෙනුමක් සංවර්ධනය කිරීම ව්‍යාපෘතියේ අරමුණ වන අතර පහත සඳහන් අරමුණු ඒ සඳහා දක්වා ඇත. 

  • වෙරළබඩ කලාපවල නිර්මිත පරිසරයට දේශගුණික විපර්යාසයන්ගෙන් වන බලපෑම හඳුනා ගැනීම
  • වෙරළබඩ කලාපවල නිර්මිත පරිසරයට දේශගුණික විපර්යාසයන්ගෙන් වන බලපෑමේ සන්දර්භය තුළ, පැරිස් ගිවිසුමෙහි අවශ්‍යතා සමඟ තිරසාර සංවර්ධන අරමුණු (එස්.ඩී.ජී.) හා ආපදා අවදානම් අවම කිරීම සඳහා සෙන්ඩායි රාමුව 2015-2030 (එස්.එෆ්.ඩී.ආර්.ආර්.) සමඟ ඒකාබද්ධ කිරීම සඳහා සුසංයෝගී රාමුවක් සකස් කිරීම
  • සුසංයෝගී රාමුවට අනුකූලව වෙරළබඩ නිර්මිත පරිසරය තුළ දේශගුණික අනුවර්තනය වීමේ අවස්ථාවන් හඳුනා ගැනීම
  • වෙරළබඩ කලාපවල දේශගුණික විපර්යාසයන්ට මුහුණ දීම සඳහා නිර්මිත පරිසරය තුළ දේශගුණික අනුවර්තනය වීමේ කුසලතා තුළ ඇති පරතර අවබෝධ කර ගැනීම.
  • වෙරළබඩ කලාපවල නිර්මිත පරිසරය තුළ දේශගුණික විපර්යාසයන්ට අනුවර්තනය වීමේ නිපුණතා වැඩි දියුණු කිරීම සඳහා අන්තර් විෂයයීය හා නව්‍ය පර්යේෂණ පදනම් කරගත් ඉගෙනුම් සංවර්ධනය කිරීම.

පර්යේෂණ ප්‍රතිඵල වශයෙන්, BEACON  ව්‍යාපෘතිය විසින් වෙරළබඩ කලාපවල නිර්මිත පරිසරයට දේශගුණික විපර්යාසයන්ගෙන් වන බලපෑම් පිළිබඳ විමර්ශනයක් සිදු කරනු ඇත (01). 01 හි කොටසක් ලෙස හඳුනාගෙන ඇති තේමාවන් මත පදනම්ව, වෙරළබඩ ප්‍රදේශවල නිර්මිත පරිසරයේ සන්දර්භය තුළ, එය පැරිස් ගිවිසුමෙහි අවශ්‍යතා සමඟ තිරසාර සංවර්ධන අරමුණු හා ආපදා අවදානම් අවම කිරීම සඳහා වන සෙන්ඩායි රාමුව (එස්. එෆ්.ඩී.ආර්.ආර්.) සමඟ ඒකාබද්ධ කිරීමේ අවස්ථාවන් සහ අවහිරතා පිළිබඳ සංස්ලේෂණ වාර්තාවක මූලික අදියරය නිර්මාණය කරනු ඇත (02). 02 හි කොටසක් ලෙස හඳුනාගෙන ඇති අවස්ථාවන් සහ අවහිරතා, දේශගුණික විපර්යාසයන්ට අනුවර්තනය වීම සඳහා පුළුල් රාමුවක් සංවර්ධනය කිරීම සඳහා පදනම සපයනු ඇත (03). ඉදිකිරීම් හා නැවත සකස් කිරීමේ චක්‍රවල විවිධ අවස්ථාවල දී ඒකාබද්ධ හා සුසංයෝගී අනුවර්තන පියවරයන් ක්‍රියාත්මක කිරීමේ දී නිර්මිත පරිසරය වෘත්තිකයින්ට, සේවාදායකයින්ට සහ ප්‍රතිපත්ති සම්පාදකයින්ට මෙම රාමුව ප්‍රයෝජනවත් වනු ඇත. තව ද, වෙරළබඩ ප්‍රදේශවල නිර්මිත පරිසරය තුළ දේශීය අනුවර්තන උපාය මාර්ග ක්‍රියාත්මක කිරීම පිළිබඳ සිද්ධි අධ්‍යනය සහ යහපත් භාවිතයන් සහිත මාර්ගෝපදේශ සටහනක්  සකස් කරනු ලැබේ (05). නිර්මිත පරිසරයේ දේශගුණික විපර්යාසන්ට  අනුවර්තනය වීම  සඳහා නිර්මිත පරිසරය පාර්ශවකරුවන්ගේ කාර්යභාරය BEACON ව්‍යාපෘතිය විසින් හඳුනා ගනු ඇති අතර (04), ඒ හා සම්බන්ධ නිපුණතා පරතර හා නොගැලපීම් ඇගයීමට ලක් කෙරෙනු ඇත (06). වෙරළබඩ කලාපවල දේශගුණික විපර්යාසයන්ට  මුහුණ දීම සඳහා නිර්මිත පරිසරය වෘත්තිකයන් හොඳින් දැනුවත්ව සිටිය යුතුය. මේ අනුව, වෙරළබඩ කලාපවල දේශගුණික විපර්යාසයන්ට මුහුණ දීම සඳහා දැනුම, කුසලතා සහ නිපුණතා හඳුනා ගැනීම වැදගත් ය. වෙරළබඩ කලාපවල දේශගුණික විපර්යාසයන්ට මුහුණ දීම සඳහා නිර්මිත පරිසරය තුළ අන්තර් විෂයීය හා නව්‍ය පර්යේෂණ පදනම් කරගත් ඉගෙනුමක් සංවර්ධනය කිරීමට ව්‍යාපෘතිය අදහස් කරන අතර යෝජිත නිපුණතා රාමුව (07) යෝජිත ඉගෙනුම් වේදිකාවේ විෂයමාලාව සංවර්ධනය කිරීම (08) සඳහා පදනම සපයනු ඇත. මෙම සියලු ප්‍රතිදානයන් දැඩි විද්‍යාත්මක ක්‍රියාවලියක් තුළින් සංවර්ධනය කෙරෙන අතර විෂයපථය තුළ විද්‍යාත්මක න්‍යායට සෘජුවම දායක වනු ඇත. මෙම ප්‍රතිදානයන් මත පදනම්ව, දැනුම පදනම් තවදුරටත් වැඩිදියුණු කරන සම්මන්ත්‍රණ සහ සඟරා පත්‍රිකා ද සඟරා විශේෂ කලාපයක් ද නිකුත් කිරීමට අදහස් කෙරෙයි. න්‍යායට පමණක් නොව, ඉහත සාකච්ඡා කළ ප්‍රතිදානයන්, යුරෝපයේ සහ ඉන් ඔබ්බෙහි විෂය කරුණුවල වැදගත්කම නිසා, වෙරළබඩ කලාපවල නිර්මිත පරිසරයේ දේශගුණික විපර්යාසයන්ට මුහුණ දීම සඳහා ප්‍රායෝගික භාවිතයට වැදගත් දායකත්වයක් සපයනු ඇත. නිර්මිත පරිසරය තුළ අන්තර් විෂයයීය හා නව්‍ය පර්යේෂණ පදනම් කරගත් ඉගෙනුම් සංවර්ධනය කිරීම තුළින් නිර්මිත පරිසර වෘත්තිකයන්ගේ දැනුම් පදනම වැඩි දියුණු කර ගැනීමට එය තවදුරටත් සහාය වනු ඇත.

මෙම ප්‍රතිදානයන් ප්‍රතිපත්ති නිෂ්පාදනයට සහ වෙරළබඩ කලාපවල නිර්මිත පරිසරය තුළ දේශගුණික විපර්යාසයන්ට අනුවර්තනය වීම හා සම්බන්ධ ගැටලු අවබෝධ කර ගැනීම සඳහා ජාතික හා පළාත් පාලන ආයතන, ජාත්‍යන්තර සංවිධාන, ලාභ අරමුණු කරනොගත් සංවිධාන සහ නිර්මිත පරිසර වෘත්තිකයන් සඳහා සෘජු දායකත්වයක් සපයනු ලැබෙයි.

காலநிலைத் தழுவலுக்கான சூழலியல் கற்கை உருவாக்கம் (BEACON)

BEACON (காலநிலை தழுவலுக்கான சூழலியல் கற்கை உருவாக்கம்) என்பது ஓர் இணைந்த ஆய்வுக் கருத்திட்டமாகும். இதற்கு ஐரோப்பிய யூனியனின் எராஸ்மஸ் பல்கலைக்கழகத்தால் துணைநிதி இடப்படுகின்றது. இந்த மூன்று ஆண்டுகால ஆராய்ச்சியின் நோக்கம் யாதெனில், கடலோரப் பிராந்தியங்களின் கட்டமைக்கப்பட்ட சூழல் தொடர்பிலான காலநிலை மாற்றத்தை இனங்காண்பதனை நோக்கமாகக் கொண்டதாகும். காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பகுதியாகக் கடலோரப் பகுதிகள் காணப்படுகின்றன. சொத்துக்கள், கட்டமைப்புக்கள், கடலோரத் தொழில் நடவடிக்கைகள், கடலோர மற்றும் கடற்சூழல் அமைப்புக்கள் பாதிப்படைகின்றன. பெரும்பாலும் நகரப்பகுதிகள் கடலோரத்தினை அண்டியதாக இருப்பதால் கடலோரப்பகுதியில் அதிகளவிலான சனத்தொகை காணப்படுகின்றது. எனவே கடலோரப் பகுதிகளில் நிலையான காலநிலைத் தழுவல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆனபோதிலும் கடலோரப் பகுதிகளில் கட்டுமான மற்றும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களில் காலநிலை மாற்றத்தின் பாதிப்புக்கள் தொடர்பிலான அறிவு குறைவாகவே காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்குச் சுற்றுச்சூழல் சார்ந்த தொழில் வல்லுனர்களை உருவாக்குதல் வேண்டும். அவர்கள் இது தொடர்பிலான அறிவு, மற்றும் திறன் மேம்பாட்டில் ஏனையவர்களுக்கு முன்னணியாக இருப்பார்கள். இதன் பிரகாரம் கடலோரப்பகுதிகளில் புத்துணர்வான சுற்றுச்சூழல் நடவடிக்கைகளைக் கட்டியெழுப்புவதற்குப் பின்வரும் நோக்கங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

  • கடலோரப் பிராந்தியங்களின் கட்டமைக்கப்பட்ட சூழலில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களை அடையாளங் காணல்.
  • கடலோரப்பகுதிகளின் கட்டமைக்கப்பட்ட சூழலில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களின் பின்னணியை நிலைத்திருக்கும் அபிவிருத்தி இலக்குகள் (SDG)இ மற்றும் அனர்த்த அபாயங்களைக் குறைப்பதற்கான செண்டாய் (Sendai) அமைப்பு 2015-2030 (SFDRR) ஆகியவற்றுடன் பாரிஸ் ஒப்பந்தத்தின் தேவைகளை ஒன்றிணைப்பதற்கான ஓர் ஒத்திசைவான கட்டமைப்பினை உருவாக்குதல்.
  • கடலோரப் பகுதிகளில் காலநிலைத் தழுவல் தொடர்பிலான சூழலியல் கட்டமைப்புக்களை உருவாக்குவதற்குரிய வாய்ப்புக்களை அடையாளங் காணல்.
  • கடலோரப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கக் கட்டமைக்கப்பட்ட சூழலில் காலநிலைத் தழுவலில் திறன் இடைவெளியைப் புரிந்து கொள்ளல்.
  • கடலோரப் பகுதிகளில் கட்டமைக்கப்பட்ட சூழலில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திறன்களை மேம்படுத்துவதற்கு ஏற்ற வகையில் புத்தாக்கமான ஆய்வு அடிப்படையிலான கற்றலை முன்னேற்றி அபிவிருத்தி செய்தல்.

காலநிலை மாற்றம் தொடர்பாகக் கடலோரப் பகுதிகளில் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் முதன் முதலில் ஆய்வு செய்வதாக BEACON (காலநிலை தழுவலுக்கான சூழலியல் கற்கை உருவாக்கம்) விளங்குகின்றது (01). பகுதி 01இல் அடையாளங் காணப்பட்ட கருப்பொருளின் அடிப்படையில் கடலோரப் பிராந்தியத்தின் கட்டமைக்கப்பட்ட சூழலின் பின்னணியில் பாரிஸ் ஒப்பந்தத்தின் தேவைகளை நிலைத்திருக்கும் அபிவிருத்தி இலக்குகள் மற்றும் மற்றும் அனர்த்த அபாயங்களைக் குறைப்பதற்கான செண்டாய் (Sendai) அமைப்பு 2015-2030 (SFDRR) என்பவற்றை ஒருங்கிணைப்பதில் உள்ள தடைகள் குறித்த தொகுப்பு அறிக்கையைக் குறிப்பிடுகின்றது (02). காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கத்தைத் தவிர்ப்பதற்கான விரிவான கட்டமைப்பு வரைபுகளை அபிவிருத்தி செய்வதற்கும் நிலைத்திருக்கும் அபிவிருத்தி இலக்குகள் மற்றும் ளுகுனுசுசு உடன் மறுசீரமைப்பதற்கும் பகுதி 02 இனால் அடையாளங் காணப்பட்ட தடைகள் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பான விடயங்கள் உதவியாக அமையும் (03). கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போதான வெவ்வேறு கட்டங்களில் ஒருங்கிணைந்த மற்றும் ஒத்திசைவான தழுவல் நடவடிக்கைகளானவை சூழலியல் தொழில் வல்லுனர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்குப் பயனளிக்கும். மேலும் கடலோரப் பகுதிகளில் கட்டமைக்கப்பட்ட சூழலில் உள்;ர் தழுவல் உபாயங்களை அபிவிருத்தி செய்வதற்குரிய கள ஆய்வு முறைகளையும் சிறந்த நடைமுறைகளையும் கொண்ட வழிகாட்டுதல் குறிப்புக்கள் உருவாக்கப்படும் (05).

கட்டமைக்கப்பட்ட சூழலில் கடலோரப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஒத்திசைவான கட்டமைப்புக்களை உருவாக்குவதில் பங்குதாரர்களின் வகிபங்கு தொடர்பில் BEACON அடையாளப்படுத்தும் (04) மற்றும் திறனுக்கான இடைவெளி மற்றும் பொருத்தமற்ற தன்மைகள் தொடர்பிலும் மதிப்பீடு செய்கின்றது (06). சுற்றுச் சூழல் தொடர்பான தொழில் வல்லுனர்கள் கடலோரப் பகுதிகள் தொடர்பில் நன்கு அறிந்தவர்களாகவும் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கவல்ல போதுமான திறமையும் உடையவர்களாக இருத்தல் வேண்டும். இதனால் கடலோரச் சூழலில் ஏற்படும் சவால்களைச் சமாளிக்கக் கூடிய அறிவு, திறன் மற்றும் ஆற்றல் என்பன இருக்க வேண்டியது முக்கியமானதாகும். கடலோரப் பிராந்தியங்களில் ஏற்படும் சவால்களைச் சமாளிக்கவல்ல சூழலியல் கட்டமைப்புக்களை உருவாக்குவதனையே இந்தத் திட்டமானது வலியுறுத்துகின்றது (07). அத்துடன் கற்றலுக்கான தளத்தையும் ஏற்படுத்துகின்றது (08). கடுமையான விஞ்ஞான ரீதியான செயன்முறைகளின் மூலமே அனைத்து வெளியீடுகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. அத்துடன் விஞ்ஞான ரீதியான கோட்பாடுகள் நேரடியாகப் பங்களிப்புச் செய்கின்றது. இவ்வெளியீடுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாநாடுகள் மற்றும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலம் அறிவு விருத்தியாகின்றது. இவ்வெளியீடுகள் கோட்பாடுகளின் பயன்கள் தொடர்பில் மாத்திரம் குறிப்பிடவில்லை. மாறாக ஐரோப்பாவிற்கு உள்ளேயும் அப்பாலும் உள்ள விடயங்களுக்கு முக்கியத்துவமளிக்கின்றது. கடலோரப் பிராந்தியங்களில் ஏற்படும் காலநிலை மாற்றம் தொடர்பிலான சவால்களைச் சமாளிப்பதற்கான நடைமுறைகளை வகுப்பதற்கு இது முக்கியமானதாகும். அறிவினை விருத்தி செய்வதற்கும் சூழலியல்சார் தொழில் வல்லுனர்கள் மூலம் புத்தாக்கமான சூழலைக் கட்டமைப்பதற்கும் இது உதவிபுரிகின்றது.

இத்தகைய வெளியீடுகளானது கடலோரப் பகுதிகளில் கட்டமைக்கப்பட்ட சூழலின் காலநிலை மாற்றத்தின் சவால்கள் தொடர்பான சிக்கல்நிலைகளைப் புரிந்து கொள்வதற்குத் தேசிய மற்றும் உள்;ர் அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல்சார் தொழில்முறை அமைப்புக்களுக்கு நேரடியான உள்ளீடுகளை வழங்குகின்றது.